வேண்டாம், பகலில் சுட்டெறிக்கிறாய் என்றேன்.
நிலவோடு நான் வரவா என்றது.
வேண்டாம், இருட்டின் தனிமை பழகி விட்டதென்றேன்.
வெளிச்சம் சொன்னது,
வேண்டாமென்றாலும் விடியலோடு நான் வருவேன்.
கதைவடைத்தாலும் ஒளிக்கதிராய் உள் புகுவேன்.
கனவில் நீ மிதந்தாலும் கண் திறக்க வைப்பேன்.
வாழ்வின் அழகை நீ ரசிக்க அழையாமல் வருவேன்.
பளிச்சென எண்ணம் தோன்றியது.
வெளிச்சம் தான் வழி காட்டுமோ?
மாய்ந்த மனது உயிர்தெழுமோ?
No comments:
Post a Comment