Wednesday, March 6, 2019

இருளில் தெரிந்த உண்மை

இருட்டறையில் 
நெருக்கமான தீண்டலில் 
இறுக்கமான அரவணைப்பில் 
சூடான மூச்சு காற்றில் 
ஈரமான முத்த மழையில் 
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
என் பிள்ளையின் அபிரிமிதமான அன்பை நான் உணர்ந்தேன்.

Tuesday, March 5, 2019

வெளிச்சம் உள்ளே வரவா என்றது.
வேண்டாம், பகலில் சுட்டெறிக்கிறாய் என்றேன்.
நிலவோடு நான் வரவா என்றது.
வேண்டாம், இருட்டின் தனிமை பழகி விட்டதென்றேன்.

வெளிச்சம் சொன்னது,
வேண்டாமென்றாலும் விடியலோடு நான் வருவேன்.
கதைவடைத்தாலும் ஒளிக்கதிராய் உள் புகுவேன்.
கனவில் நீ மிதந்தாலும் கண் திறக்க வைப்பேன்.
வாழ்வின் அழகை நீ ரசிக்க அழையாமல் வருவேன்.

பளிச்சென எண்ணம் தோன்றியது.
வெளிச்சம் தான் வழி காட்டுமோ?
காய்ந்த சிறகு துளிர்த்தெழுமோ?
மாய்ந்த மனது உயிர்தெழுமோ?

விடை தேடி வெளிச்சத்தை வரவேற்கிறேன்.

Monday, February 25, 2019

மௌனம் மொழி ஆகுமா?

உன் மௌனம் உன் ரகசியங்களின் பெட்டகம்.
எனக்கோ அது சொற்களில்லா புத்தகம்.

உன் மௌனம் உன் எண்ணங்களுக்குத் திரை.
எனக்கு அது தாண்ட முடியா இரும்புச் சிறை.

உன் மௌனம் மொழியில்லாத ஆரவாரம்.
அதனை உணரமுடியாத எனக்கு பெரும்பாரம்.

உன் மௌனம் கரையைச் சீண்டி பார்க்கும் அலை.
அது புரிந்தும் புரியாமலும் தள்ளாடும் எந்நிலை.

உன் மௌனத்தைப் பத்திரமாய்க் காத்திரு.
அது வார்த்தைகள் ஆகும்வரை நான் காத்திருப்பேன்.