பகலில் காலைத் தழுவி இரவில் விட்டோடும்
நிழல் நீண்ட நாள் துணையா?
வெளிச்சத்திலா விளக்கை கேட்டேன்?
காரிருளில் தானே கரம் நீட்ட சொன்னேன்?
என்னை சுற்றி இருக்கும் காற்றில் கரைந்திரு.
என் இயக்கத்தில் ஒன்றாய் சேர்ந்திரு.
அதிர்ச்சியில் நான் மறந்த சுவாசமாய் நீ இரு.
மரணத் தருவாயில் மீண்டும் ஒரு முறை கூட இரு.
மாய்ந்து மண்ணோடு நான் போகும் போது
உன் மூச்சில் என்னை உள்வாங்கி கொள்.
நிழலாய் நீ வேண்டாம். நிஜமாய் என்னோடிரு.
No comments:
Post a Comment