Monday, November 14, 2016

வெகு நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு சிந்தனை. எண்ணத்தில் சுவை. எழுதுவதில் சுகம்.

தொடக்கத்தில் பயணம் இல்லை
தொடர்ச்சியில் உள்ளது தான் வாழ்க்கை
விடை அறிந்தால் சுவை இல்லை
வினாவிலுள்ள வியப்பு தான் வாழ்க்கை
ஒளி இருந்தும் வெளிச்சம் இல்லை
இருளில் காணும் பொருள் தான் வாழ்க்கை
கண்ணெதிரே இருந்தும் கைவசம் இல்லை
காரியத்தின் சுவை தான் வாழ்க்கை
அறிவிருந்தும் ஆக்கம் இல்லை
ஊக்கத்தின் ஆற்றல் தான் வாழ்க்கை
மடியில் தானாய் விழுந்த வெற்றியில் பெருமை இல்லை
வீழ்ந்த பின்னும் விழித்தெழுவது தான் வாழ்க்கை
நானென்ற இயக்கத்தில் நன்மை இல்லை
என்னால் பயன் விளைந்தால் தான் வாழ்க்கை

பயனைத் தேடி என் பயணம் தொடர்கிறது.


2 comments:

  1. பயன் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    நோக்கம் முடையா னுழை.

    அருமையான உறை.பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி.

    ReplyDelete